நாளை நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படமும், ஹரிஷ் கல்யாணின் ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய இரண்டு படங்களும் வெளியாக உள்ளன.
விஸ்வரூபம் 2:
நடிகர் கமல்ஹாசன் நடித்து, இயக்கி,தயாரித்து வெளியான திரைப்படம் விஸ்வரூபம். 2013 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் கமல்ஹாசனுடன் பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
விஸ்வரூபம் படத்தின் இறுதியிலேயே, இப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிதிப் பிரச்சனை காரணமாக இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் மீண்டும் தொடங்கப்பட்டு, அனைத்துப் பணிகளும் முடிந்து, ஆகஸ்ட் 10 ஆம் தேதி (நாளை) வெளியாக உள்ளது.
நடிகர் கமல் அரசியலில் நுழைந்த பின் வெளியாகும் முதல் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பியார் பிரேமா காதல்:
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்களான ஹரிஸ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘பியார் பிரேமா காதல்’. யுவன் சங்கர் ராஜா தயாரித்து, இசையமைத்துள்ள இப்படத்தை எலன் இயக்கியுள்ளார்.
காமெடி கலந்த காதல் படமாக உருவாகி உள்ள இப்படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒரு நாள் தள்ளி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
பிக்பாஸ் போட்டியை நடத்திய கமலுக்கு போட்டியாக, பிக்பாஸில் போட்டியாளர்களாக பங்கேற்ற ஹரிஷ் மற்றும் ரைசா படம் நாளை வெளியாவது, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment