Home Ads

Thursday, 9 August 2018

கமலின் ‘மர்மயோகி’ மீண்டும் தொடக்கம்

கமலின் ‘மர்மயோகி’ படத்துக்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்கை கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது.


பிரமிட் சாய்மீரா நிறுவனம் சார்பில் பல வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட படம் ‘மர்மயோகி’. இந்தப் படத்தில் கமல்ஹாசன் நடித்து வந்தார். இடையில் அந்தப் படம் கைவிடப்பட்டது. இந்தப் படத்தில் நடிகைகள் த்ரிஷாவும், ஸ்ரேயாவும் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ‘விஸ்வரூபம் 2’ படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை வெளியிட தடைகோரி உயர்நீதிமன்றத்தில் பிரமிட் சாய் மீரா நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை பிரமிட் நிறுவனம் வாபஸ் வாங்கியுள்ளது.

இவ்வழக்கில் கமல் தரப்பில் மீண்டும் ‘மர்மயோகி’ படம் தொடங்க இருப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர். 

No comments:

Post a Comment