Home Ads

Wednesday, 8 August 2018

சூரிய அஸ்தமனத்தில் மறைந்த உதயசூரியனின் இந்த வார்த்தையை மறக்க முடியுமா?

உதய சூரியனுக்கு முன் என் உதயம் இருக்கவேண்டும்... சூரிய அஸ்தமனத்தின் போது என் மரணம் இருக்க வேண்டும். தொண்டர்களிடம் அடிக்கடி கூறிய வார்த்தையின் படி தன் மரணத்தை 6.10ற்கு நிர்ணயித்துக் கொண்டாரோ இந்த தமிழன்?...

கருணாநிதியின் மறைவால் ஒட்டுமொத்த தமிழர்களும் கண்ணீரில் மூழ்கி இருக்கும் இத்தருணத்தில் அவர் நமக்காக கொடுத்த பொன்மொழிகள் என்று அழியாதவை என்றே கூறலாம்.

ஆனந்த விகடனில் வந்த கட்டுரையில் பெண்மணி ஒருவர் இப்படி எழுதியிருந்தார். விதவை என்கிற வார்த்தை கூட எங்களை வஞ்சிக்கின்றது இந்த வார்த்தையில் கூட பொட்டு இல்லை. நாங்கள் ஒதுக்கப்படுகிறோம் என்று எழுதியிருந்தார்.

அதற்கு உடனே பதிலளித்து எழுதியிருந்து நம் ஐயா கலைஞர் அவர்கள், விதவை என்கிற வார்த்தை தமிழ் அல்ல அது வடமொழி. தமிழில் கைம் பெண் என்று தான் அழைக்கிறோம். நீங்கள் ஒரு பொட்டு இல்லையே என்று வருத்தப்பட வேண்டாம். கைம் பெண்ணிற்கு ஒன்றல்ல இரண்டு பொட்டுக்கள் உள்ளன.

தமிழ் எப்பொழுதும் உங்களை வஞ்சிக்காது, வாழவைக்கும். நான் இருக்கிறேன் என் கழகம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் விலைமதிப்பற்ற பொன்மொழிகளை சிலவற்றை இங்கே காணலாம்.

கருவில் இருந்து கல்லறை செல்லும் தூரம் தான் வாழ்க்கை - மனித உயிர் விலையேறப்பெற்றது.
தமிழர்களே! என்னை கடலில் தூக்கி போடுங்கள்.. கட்டுமரமாக இருப்பேன்.. நீங்கள் அதில் மிதந்து கரை சேரலாம்.
மிஞ்சினால் கெஞ்சுவது எப்படி கோழைதனமோ, அதைபோன்றது தான் கெஞ்சுகிற போது மிஞ்சும் வீரம் ஆகும்
'முடியுமா நம்மால்' என்பது தோல்விக்கு முன்புவரும் தயக்கம். 'முடித்தே தீருவோம்' என்பது வெற்றிக்கானத் தொடக்கம்.
பாராட்டும், புகழும் குவியும் போது; குட்டையான வாசலுக்குள் - குனிந்து செல்வது போன்ற அடக்கம் வேண்டும். இல்லையேல் நெற்றியடி கிடைக்கும்!.
இழிவு செய்யும் நண்பர்களை விட எதிர்த்து நிற்கும் பகைவர் எவ்வளவோ மேல்!
ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார் என்பதை, அவர் இறந்துபோன நாளில் இருந்து கணக்கிட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment