Home Ads

Monday 13 August 2018

ஒரே வருடத்தில் 42 கிலோ உடல் எடையை குறைத்தது இப்படித்தான்.. இமான் பேட்டி



ஒரு வருடத்திற்கு முன்பு அதிக உடல் எடையுடன் ஸ்ரீகாந்த் தேவா போல காட்சியளித்த இசையமைப்பாளர் இமான், தற்போது உடல் எடையை அப்படியே குறைத்து அனிருத் போல ஒல்லியாக மாறியுள்ளார். இந்த மாற்றம் நடந்தது எப்படி என இமான் தற்போது ட்விட்டரில் கூறியுள்ளார்.

ஸ்கூல் படிக்கும்போதிருந்தே பிட்டாக இருக்கவேண்டும் என இவருக்கு ஆசையாம், ஆனால் பள்ளிக்கு செல்வது, அதே நேரத்தில் மியூசிக் ரெகார்டிங் செல்வது என பிஸியாக இருந்ததால் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கவில்லை. ஒரே இடத்தில் பல மணி நேரங்கள் அமர்ந்து பணியாற்றியதால் உடல் பருமன் அதிகரித்துவிட்டது என அவர் கூறியுள்ளார்.

கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து உடற்பயிற்சி, ஒழுங்காக டயட் எடுத்துக்கொண்டதால் தற்போது இப்படி மாற்றியுள்ளேன். அப்போது 117 கிலோ இருந்த நான் 42 கிலோ எடை குறைத்து 75 கிலோவாக குறைத்துள்ளேன்" என இமான் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment