Home Ads

Monday, 13 August 2018

அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்கள் விஜய்யும் அஜித்தும். இவரது படங்கள் ரிலீஸாகும் நேரத்தில் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே இருக்காது.

இந்நிலையில் அஜித் நடித்து மிகப்பெரும் வெற்றி பெற்ற பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்யை பற்றி கூறுகையில், ‘விஜய் சாருடன் நான் இரண்டு முறை சேர்ந்து பணியாற்ற வேண்டியது, ஆனால் அந்த நேரங்களில் ஒன்று அவர் பிசியாக இருப்பார், இல்லை நான் பிசியாக இருப்பேன்’ என்றார்.

ஒருவேளை அந்த இரண்டு முறை, அஜித்தின் பில்லா, ஆரம்பம் தானா? என்று தெரியவில்லை. அதில் எல்லாம் நடித்திருந்தால் விஜய்யின் புகழ் இன்னும் அதிகரித்து இருக்கும். மேலும் அந்த பேட்டியில், விரைவில் ஒரு படம் விஜய்யுடன் பண்ணும் யோசனை உள்ளது என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment