Home Ads

Sunday, 30 December 2018

பிளாஷ்பேக் 2018: சூர்யாவுக்கு மட்டும் அல்ல ஜோதிகாவுக்கும் சோதனை தான்

2018ம் ஆண்டு வெளியான படங்களில் விஜய், சூர்யா உள்ளிட்ட சில நடிகர்களின் படங்கள் சர்ச்சையில் சிக்கின.

2018ம் ஆண்டு அரசு சார்பில் இலவச விளம்பரம் அமோகமாக கிடைத்தது சர்கார் படத்திற்கு தான். ஒரு காட்சியால் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் படாதபாடு பட்டுவிட்டார்.

இந்த ஆண்டு சர்ச்சையில் சிக்கிய படங்களின் விபரங்களை பார்ப்போம்.

சூர்யா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வந்த சொடக்கு மேல பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அந்த பாடலில் வந்த 'வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது, அதிகார திமிர, பணக்கார பவர, தூக்கிப்போட்டு மிதிக்க தோணுது' என்ற வரிகளால் பிரச்சனை ஏற்பட்டது.

ஜோதிகா

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான நாச்சியார் படத்திற்கு பெரும் அளவில் எதிர்ப்பு கிளம்பியது. அந்த படத்தில் ஜோதிகா பேசிய கெட்ட வார்த்தையால் தான் பிரச்சனை கிளம்பியது. ஜோதிகாவின் கெரியரிலேயே அவர் இப்படி பேசியிருக்க மாட்டார்.

கவுதம் கார்த்திக்

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் சர்ச்சையில் சிக்கியது. தலைப்பு மட்டும் அல்ல படத்தில் வந்த வசனங்களும் இரட்டை அர்த்தம் கொண்டவையாக இருந்தது. ஆபாச வசனங்களை நம்பி படம் எடுத்து வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

தனுஷ்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த வட சென்னை படத்தில் கெட்ட வார்த்தைகள் அதிகம் இருந்ததால் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அமீர், ஆண்ட்ரியாவின் முதல் இரவு காட்சிக்கும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த காட்சி நீக்கப்பட்டது.

விஜய்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்திற்கு அரசு தரப்பில் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அரசின் இலவச கிரைண்டர், மிக்சியை தீயில் போட்ட காட்சியை நீக்க வைத்தனர். அரசின் எதிர்ப்பு படத்திற்கு இலவச விளம்பரமாக அமைந்துவிட்டது. சர்கார் பிரச்சனை இன்னும் முடிந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சீதக்காதி படத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வள்ளல் சீதக்காதியின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


No comments:

Post a Comment