Home Ads

Sunday, 30 December 2018

10 நாட்களில் தொப்பையை வேகமாக குறைக்க வேண்டுமா? அப்போ இதை டீரை பண்ணுங்க!

பலருக்கும் தொப்பை ஒரு உறுப்பாகவே ஆகிவிட்டது. தொப்பை கொழுப்புக்களின் தேக்கத்தால் ஏற்படுவதால், அது உடலின் செயல்பாடுகளில் இடையூறை ஏற்படுத்தி, அதனால் பல உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும்.

பூண்டு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, வேகமாக உடல் எடை குறையச் செய்யும். இதே போன்று எலுமிச்சையில் இயற்கையாகவே உடலின் வெப்பத்தை அதிகரித்து, மெட்டபாலிசத்தை சீராக்கி, எடையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

இத்தகைய அற்புத குணங்களை கொண்ட பூண்டு மற்றும் எலுமிச்சை கொண்டு எப்படி தொப்பையை வேகமாக குறைப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

    எலுமிச்சை – 1

    பூண்டு – 3 பற்கள்

    சுடுநீர் – 1 கப்

செய்முறை

    முதலில் வெதுவெதுப்பான ஒரு கப் நீரில் ஒரு எலுமிச்சையின் சாற்றினைப் பிழிந்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    பின்பு அதில் சில பூண்டு பற்களைத் தட்டி, எலுமிச்சை நீரில் போட்டு, 15 நிமிடம் கழித்து வடிகட்டிக் குடிக்க வேண்டும். மேலும் அதில் உள்ள பூண்டு பற்களைத் தூக்கி எறிந்துவிடுங்கள்.

குறிப்பு

    இந்த பானம் மிகவும் சுவையாக இருக்காது. இந்த பானத்தைக் குடிப்பது சற்று கஷ்டமாகத் தான் இருக்கும்.

    இருப்பினும், தொப்பையை வேகமாக குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பானத்தை தினமும் காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment