Home Ads

Tuesday, 14 August 2018

கருணாநிதி எழுதிய கடிதம் வெளியானதால் திமுகவில் பரபரப்பு

இன்று தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், கருணாநிதி முன்னர் அழகிரியைப் பாராட்டி தன் கைப்பட எழுதிய கடிதத்தை அவரது ஆதரவாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

இதனால், தி.மு.க-வில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று மெரினா கடற்கரையிலுள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு குடும்பத்துடன் சென்ற அழகிரி, அஞ்சலி செலுத்திய பின்னர் உண்மையான விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் என் பக்கம் இருக்கிறார்கள். என்ன ஆதங்கம் என்பது பின்னால் தெரியும் என்று பேசியது தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது,

அழகிரியை மீண்டும் கட்சியை சேர்த்துக்கொண்டால் தென் மாவட்டத்தில் வலுவான இடத்தை பிடிக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர், ஆனால் இதற்கு ஸ்டாலின் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கருணாநிதி அழகிரியை பாராட்டி எழுதி கடிதம் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment