Home Ads

Tuesday, 21 August 2018

நடிகர் கமல் வீட்டுக்குள் சுவர்ஏறி குதித்த மர்ம நபர் - விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்

நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி துவங்கிய பிறகு தன் ஆழ்வார்பேட்டை வீட்டை கட்சி அலுவலகமாக மாற்றிவிட்டார். அதனால் எப்போதும் அங்கு கூட்டம் இருந்துகொண்டே தான் இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு கமல் வீட்டுக்குள் ஒருவர் புகுந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். அதே போன்ற ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது.

சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள கமல்ஹாசன் வீட்டுக்குள் நேற்று இரவு ஒரு மர்ம நபர் சுவர் ஏறி குதித்துள்ளார். அதை பார்த்த பாதுகாவலர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் பெயர் மலைச்சாமி என்றும், மனநலம் சரியில்லாதவர் என்றும் தெரியவந்தது. அதனால் அவர் மீது வழக்கு பதியாமல் குடும்பத்தினரை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment