‘குடும்பம் ஒரு கதம்பம்’ என்றார் வீட்டுப்பாட இயக்குனர் விசு! அவரது டைப் படங்களுக்கு ரசிகர்கள் மூடு விழா கண்டுவிட்டாலும், அவர் சொன்ன கருத்து என்னைக்கு கருத்துச்சு? சந்தோஷம், அழுகை, துக்கம், சிரிப்பு, கண்ணீர், கைகலப்பு என்று ஒவ்வொரு குடும்பமும் கலந்து கட்டிதான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் காற்றின் மொழி படத்திற்காக ஜோதிகா சொன்னது போல பத்து கட்டளைகளை எழுதி விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள்.
கருத்து ஜோதிகாவுடையதா என்பது தெரியவில்லை. ஆனால் அதில் வழியும் உண்மைகளும் உரிமைகளும் ஆண்களின் அடி வயிற்றில் ஒரு ஐயோ வை உருவாக்கியிருப்பது மட்டும் நிச்சயம்.
அந்த பத்து கட்டளைகள் இதுதான்-
1.உன் விருப்பம் போல் உடை உடுத்துவாயாக.
2.நீ விரும்புவதைச் செய்வாயாக.
3. உன் கணவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டாதிருப்பாயாக.
4.பசித்தால் முதலில் நீயே சாப்பிடுவாயாக.
5.குண்டாய் இருக்க விரும்பினால் குண்டாய் இருப்பாயாக.
6.வீட்டுப் பணிகளில் உன் கணவனையும் பங்கெடுக்க செய்வாயாக.
7.நீ சம்பாதித்து உன் விருப்பம் போல் செலவு செய்வாயாக.
8.உன் மனம் மறுப்பதை, ஏற்காதிருப்பாயாக
9.ஆணும் பெண்ணும் சரி சமம் என்பதை அறிவாயாக.
10.மனதில் பட்டதைச் சொல்வாயாக.
“ஏற்கனவே வீட்ல காளியம்மா நர்த்தனம். இதில் இந்த சோதிகா வேற… இனி பறந்து வர்ற சொம்பு டம்ளரை பிடிக்க வேற தனி பயிற்சி எடுக்கணும் போலிருக்கே” என்ற புலம்பலோடு இந்த பத்து கட்டளைகளையும் கண்கள் பனிக்க மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறார்கள் கணவர்கள்

No comments:
Post a Comment