Home Ads

Monday, 8 December 2014

திருமணம் என்கிற ஸ்பீட் பிரேக்கர்

அதிகாலை 5 மணிக்கு எழுந்து பரபரப்பாக வெளிவேலைகளை கவனித்து, சமையலறையில் காய்கறிகளை ஆராய்ந்து சமையல் திட்டத்தை முடிவு செய்து பின் சுழல ஆரம்பிக்கும் மகிழ்ச்சியும்,பொறுப்பும் கலந்த மணவாழ்க்கை  இனிமை தான் -  நடுவில் வரும் ஸ்பீட் பிரேக்கர்கள் தவிர்த்து!

இரவு நேரங்களில் விரும்பி வேண்டி கணவருடன் செல்லும் ஒரு ஊர் சுற்றலில் (ஷார்ட் ட்ரைவ்) எதேச்சையாக அம்மாக்களை பற்றிய அலசல் வர, ’கல்யாணத்துக்குப் பிறகு தான் அம்மா அருமை தெரியும்’ வெகு இயல்பாக என் உற்சாக பலூனில் ஊசி குத்தியது தெரியாமல் இசைத் தட்டுடன் இசைந்து ஒரு இளையராஜா மெட்டை முணுமுணுக்க துவங்கினார்.

உள்ளுர சுருக் பீலிங் இருந்தாலும் வடிவேலு டயலாக் மாதிரி வலிக்கைலையேனு சிரிச்சு அந்தக் காட்சியை நிறைவு செய்தாலும், அடுத்த நாள் அம்மாவிடம் கொட்ட ஓடினால் இப்ப தான உனக்கும் என் அருமை தெரியுது என்று சேம் சைட் கோல் போட்டார்.

ஆற்றாமையுடன்  மனதில் உறுத்தி கொண்டிருந்ததை இறுதியில் மாமியாரிடமே கொட்டியாச், துளி நீர் துளிர்த்த கண்களுடன்.

நான் எங்க மிஸ் பண்றேன்மா, திருத்திக்க தான் கேட்கறேன்னு பீலிங்கா கேட்டாச்.

முழுவதும் கேட்டதும் ஒரு நிமிட இடைவெளிக்கு பின்  கல்யாணத்துக்கு முன்னாடி என்ன இது,  தினம் இதே சமையல் போரிங்னு சொல்லிட்டு தான் தினம் சாப்பிடுவான்,உன் மகனும் இதையே தான் சொல்வான்.ஆண்கள் அப்படி தான்னு முடித்தார்.


அட  ஆமா போல, பேசிக்கலாவே  இவிங்க இப்படி தான் போலனு ஒரு ஆசுவாசம்.

No comments:

Post a Comment