ட்விட்டர்ல முழங்கும் சில மூட நம்பிக்கைகளில் ஒன்று ட்விட்டு புக்ல வந்தா
அது நல்ல ட்விட்டுன்றது. நாம கருத்தா எழுதின பத்து ட்விட்ட விட்டுட்டு மூட்
இல்லாம எதனா சொல்வோம்னு எழுதின ஒரு மொக்கை புக்ல வந்து உறவுக்காரங்க
மத்தில மானத்த வாங்கும்.ஓ இது தான் ட்விட்டானு பார்வைகள்,இல்ல இத விட
பெட்டரால்லாம்,
ம்ஹிம் எனக்கு ட்விட்டர் புரிஞ்சு போச்சு,டாட் சொல்லிட்டு கெளம்பிடுவாங்க.
அடுத்தது விஜய், அஜித், கமல், ரஜினி, விக்ரம், விமல், ஜனகராஜ் ஏன் நேத்து வந்த அசோக் செல்வனுக்கு கூட கட்டவுட் வைச்சு பாலாபிஷேகம் பண்ற அளவுக்கு ரசிகர்கள் பட்டாளம்,வாய்க்கா தகராறு,வீச்சரிவாள்,வெட்டு குத்து இறுதியில் சில பல தக்காளி சட்னிகள்.
திடிர்னு லட்டு,பருப்பு ரசம்,பாவக்கா துவையல்னு இன்ன பிற சுவாரசியங்களும் உண்டு.
க்ருப்,க்ருப்பா சுத்துவாங்க,முதல் பெஞ்ச்,கடைசி பெஞ்ச் பாகுபாடுகளின் லேட்டஸ்ட் வெர்ஷன் உண்டு.
சில சுவாரசியமான டிஎம் கிசுகிசுக்கள் நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும்.
படம் எப்ப ரிலிஸ்,பாட்டு எப்ப ரிலிஸ்னு தயாரிப்பாளர விட அதிகமா கவலைப்படுவாங்க நம்ம ஆளுங்க. அடுத்த கட்டம் விமர்சனம். வாவ் வாட் எ படம்,ஓஹோன்னுவாங்க நாமும் அத நம்பி வீட்லசொல்லி நச்சரிச்சு தியேட்டர்ல போய் உக்காந்து அரை மணி நேரம்போனதும் ஊட்டுக்கார் நம்மை திரும்பி ஒரு பார்வை பார்ப்பார்.(கப்சிப்)சத்தமே போடாம கார்ல ஏறி உக்காந்து (டின்னர்#மூச்),ஹிஹி இன்னும் கொஞ்சம் ஸ்க்ரின் ப்ளே மெனக்கெட்டிருக்கலாம் நல்ல கருனு எதாவது சொல்லி சிரிச்சு சமாதானம் பண்ணி,வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் போனை எடுத்து படம் அருமை,பிரமாதம்னு ஒரு ட்விட் போட்டுட்டு இன்னும் பத்து பேர் நாசமா போக வழி செய்யனும்.
பொழுது போகாம ஆரம்பிச்ச ட்விட்டர் கணக்கு, நம்ம பொழுதை நாமறியாம தின்னுட்டு இருக்கும்.
DP-க்களுடன் சிரிப்பு, கோபம், அழுகை, நட்புன்னு ஒரு பிம்பத்துக்குள்ளேயே சிக்கிக்குவோம்.
சரி திருந்துவோமுன்னு ஒரு ப்ரேக் விட்டு ஒதுங்கி நின்னா, அப்போ தான் கும்பல் கும்பலா கிளம்பி வந்து ஃபாலோ பண்ணுவாங்க.
திடீருன்னு ஏதோ ஒரு காலத்துலே பிரமாதமா, கருத்தா (?) நாம எழுதின ட்விட்டை உலக மக்கள் அனைவரும் விழுந்தடிச்சு ஆர்.டி. பண்ணுவாங்க. (இவ மட்டும் எப்படி உருப்படலாமுன்ற நல்ல எண்ணம் தான்).
இது புரியாம, ‘ச்சே, நம்மை எத்தனை பேரு தேடுறாங்க. நம்ம கருத்துக்காக ஏங்கிக் கிடக்குறாங்க. இத்தனை பேருக்கு பிடிச்சிருக்கே’ன்னு திரும்ப வந்து தொபுக்கடீருன்னு குதிப்போம்.
இத்தனை குறையையும் சொல்லிகிட்டு ட்விட்டர்லயே குடியிருப்பது
“உன்னை கட்டிகிட்டு என்னத்த கண்டேன்?” எனும் புலம்பலின் அப்டேட்டட் வெர்ஷன் தான்..........

No comments:
Post a Comment