இணையத்துக்குள்ள வர வரைக்கும் பெண்ணியம்னா என்னன்னே தெரியாது
பலருக்கு.(எனக்குன்னு தனியா ஏன் சொல்லிக்கனும்).பெண்களுக்கு எதிரான
அநியாயத்த தட்டி கேட்கறதுனு அது வரைக்கும் நினைச்சிட்டு இருந்தேன்.ஆனா அந்த
பிம்பத்த இணையம் மாத்திருச்சு.
ஜீன்ஸ் போட்டா தப்பானு ஆரம்பிச்சு,லெக்கின்ஸ்,துப்பட்டா இல்லாம சுடிதார்,நைட்டி இன்ன பிற பெண்களின் உடை சுதந்திரம் தான் பெண்ணியம்னு நினைச்சேன்.திடிர்னு ஆடை தான் பிரச்சினையா பெண்ணுக்கெதிரான பாலியல் தொந்தரவுகளுக்குனு ஒரு டாபிக் கிளம்பும், நாமளும் பார்ம் ஆயிட்டோமே கருத்து சொல்லலைன்னா நல்லாருக்காதுனு அருவருக்கற மாதிரி ஆடைகள் தவறு தான் ஆணித்தரமா கூவி அமர்வோம்னு கருத்தா பெண்ணியம் பேசும் போது போன் பேட்டரி தீர்ந்துடும்.
பக்கத்துல 9 மணி ஆச்சும்மா சாப்ட ஒண்ணும் கொடுக்கலன்னு நினைவுறுத்தற மாதிரி பரிதாபமான முகத்தை வைச்சுட்டு கணவர் உட்கார்ந்திருப்பதை பார்த்து சரி போனா போவுதுனு சமையலறைக்கு போய் அங்க இருந்து ஹாலுக்கு ஒரு குரல். கொடுத்து ஏங்க தோச தான் வார்க்க போறேன்,மிளகாய் பொடி போதும்ல,மதியம் வைச்ச சாதம் கொஞ்சம் இருக்கு,என்ன வேணும்னு எக்கசக்க ஆப்ஷன்ஸ் கொடுக்கற மாதிரியே பில்டப் கொடுத்துட்டு,அவர் பதில் சொல்லுமுன் முந்தி கொண்டு,சரி ரெண்டையுமே கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடுடுங்கனு வைரைட்டியா டின்னர் கொடுத்த மாதிரியே பில்டப் கொடுப்பது தாங்க உண்மையான பெண்ணியம்.

No comments:
Post a Comment