Home Ads

Thursday, 11 December 2014

முதல் டூலா:-)

புன்னகையில் எளிதாக நட்பாக்கி கொள்ளலாம் என்று உணர்ந்துக் கொண்ட இடம் ட்விட்டர்.

தனித்தனியாக எல்லாருக்கும் நன்றி சொல்லும் அளவுக்கு நட்பு வட்டம் சுருங்கியதல்ல அதனால் பொதுவாக என் எல்லா நட்புக்களுக்கும் நன்றி நவிலவே இப்பதிவு. என் நட்பு வட்டம் என்பது நிஜ உலகில் ஒரு கை விரல்களுக்குள் அடங்கி விடும்.சிநேகம் கொண்ட மக்கள் அதிகமுண்டு.


நட்புன்னா என்ன என்பதில் கொஞ்சம் திட்டவட்டமான கருத்துக்கள் கொண்டவள் என்பதால் அந்த பெயருக்குரிய சிநேகத்திற்கு தனி இடம் கொடுப்பவள்.பொதுவாக என்னை ஒரு முன்னேற்றத்திற்கு இட்டு செல்லும்,துவண்டு விழும் நேரத்தில் சாட்டையால் அடித்து எழுந்து ஓட செய்யும் ஆண்/பெண்ணே நான் விரும்பும் நட்பு.(வயது வரம்பு வைத்துக் கொள்வதில்லை).

புரணி,குறைகள்,கிசுகிசுக்கள் முதல் படியிலேயே புன்னகையுடன் இருத்திக் கொண்டு விடுவேன்.மேற்கொண்டு இதயத்திலோ,நேரத்திலோ அனுமதியில்லை.ட்விட்டரிலும் இதே போல் சில நட்புகள் வாய்த்தது என் அதிர்ஷ்டமே.கொஞ்சம் யதார்த்ததின் சாயல் தோய்ந்த மெச்சூர்டான (தமிழ் படுத்த தெரியவில்லை மன்னிக்க) மனங்களே என் நட்பின் சாயல்.

புரணி,கிசுகிசுக்கள் பேச விரும்பாத பெண்ணா நீ எனும் கேள்விக்கு இல்லை,ஆனால் விகிதாச்சாரத்தில் வேறுபட விரும்புகிறேன்,எந்த இடத்தில் பெர்சனலாக உள்ளே நுழைந்து பார்க்க துவங்குகிறோமோ அங்கயே நின்று விடுதல் நலம்.i know where to stop அது தான் என் நிலைப்பாடு.

என் நட்புக்களும் இங்கு அவ்வாறே.Informative,productive,passionate,supportive,relaxing, இது தான் இங்குள்ள நட்புக்கள் எனக்கு. நிஜ உலகிலும் என் நட்புக்கள் இவ்வாறானதே.சமயம் வரும் போது மண்டைல கொட்டி உட்கார வைக்கிற உரிமையுள்ள நல்ல உள்ளங்கள்,செண்டிமெண்ட் ஜாஸ்தியாவுதோ,சரி சரி,finally thank u all அவ்ளோ தான் மேட்டரு:-)))

No comments:

Post a Comment