வேரோடி
#ஒரு தாவரத்தின் வியப்பு--- தோட்டத்தில் வளரும் ஒரு மூலிகையோ,பூச்செடியோ
இன்ன பிறவோ பூத்து சொறிந்து கொண்டிருக்கும் போது அது மகிழ்ச்சி மட்டுமே,
கவனத்தை கவர்வதில்லை.நீங்கள் மறந்து பின் நினைவு கூறும் ஒரு நாளில் அது
முற்றிலுமாக அழிந்து விட்டிருக்கும்.பாட்டி நம்ம வீட்ல பூத்துண்டே இருந்த
கொடி சம்பங்கி என்னாச்சு,பாகல் திடல் என்னாச்சு கேள்விகளுக்கு பாட்டியின்
பதில் அது வேரோடி போச்சும்மா,வட்டார வழக்கு.அலட்சியப்படுத்தும் அல்லது
கவனத்தை தராத ஒன்று அவ்விடத்தை விட்டு நகரும் என்பது தாவரங்களுக்கு கூட
பொருந்தும் என்பது எனக்கு பால்யத்தில் புதிதாக இருந்தது.ஊராரெல்லாம் வந்து
பறித்தால் அதற்கு பிடிக்காதாம்,நாம் தண்ணீர் விட்டு கவனமாக நாம்
பாராமரிக்கவில்லை எனில் அவ்விடம் விட்டு அகலும் அத்தாவரம்,பின் புதிய
நாத்து கொண்டு வந்து வைத்தாலும் தழைக்காதாம்,ஒரு தாவரத்துக்கு இம்புட்டு
ரோஷமா என்று வியந்ததுண்டு.வேரோடி---இடம் விட்டு வலியுடன் அகன்ற ஒன்று
என்பது வட்டார வழக்கு சொல்.உண்மையில் நாம் பயன்படுத்தும் வேரோடி நன்கு வேர்
ஊறிய ஒன்று என்பதாகும்,உண்மை தமிழ் வழக்கு.இரண்டு வழக்கிலும் இப்பெயர்
இந்த கட்டுரைக்கு பொருத்தமானது .இது இடம் பெயர்ந்த சில மனித வேரோடிகளின்
கதை.வேரோடிகளின் வலி தெரியாத மனிதரில்லை எனும் புரிதலுடன் உங்களுடன் பகிர
விழைகிறேன்.
சுட்டி --- http://www.twitlonger.com/show/n_1sj58rm
சுட்டி --- http://www.twitlonger.com/show/n_1sj58rm
No comments:
Post a Comment