Home Ads

Monday 31 December 2018

முட்டைய பச்சையா சாப்பிடலாமா..? அப்படி சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன...?

கோழிக்கும், முட்டைக்குமான சந்தேகம் ஒரு பக்கம் இருக்க, முட்டையை எப்படி சாப்பிட்டால் எந்த பாதிப்பும் வராது என்கிற பெரிய சந்தேகம் வேறொரு பக்கம் இருக்கிறது. முட்டையை விரும்பி சாப்பிட கூடிய பலருக்கு இந்த சந்தேகம் அதிகமாகவே உள்ளது. முட்டைக்குள் பலவித கேள்விகளும், மர்மங்களும் நீண்ட நாட்களாக இருக்கிறது.

முட்டைய பச்சையா சாப்பிடலாமா..? அப்படி சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன..?

அதில் ஒரு கேள்வி தான், முட்டையை பச்சையா சாப்பிடுவது நல்லதா..? அல்லது சமைத்து சாப்பிடுவது நல்லதா..? அப்படி பச்சையா சாப்பிட்டால் ஏதாவது ஆபத்து நமக்கு ஏற்படுமா..? இந்த கேள்விக்கான பதிலை தருகின்றது இந்த பதிவு. அத்துடன் பச்சை முட்டையில் உள்ள நன்மை தீமைகளையும் சேர்த்தே தெரிந்து கொள்வோம்.

கேள்விக்குள்ளான முட்டை..!

பயில்வானாக ஆகணுமா..? அப்போ முட்டைய அதிகமா சாப்பிடுங்க. உடல் எடை கச்சிதமாக இருக்க வேண்டுமா..? அதற்கும் முட்டை தான். இப்படி பலவித பிரச்சினைகளுக்கும் முட்டை சிறந்த தீர்வாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதன் மீது தனி பிரியம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது.

காரணம் என்ன..?

பலருக்கு முட்டையை அதிகம் பிடிக்க முக்கிய காரணமே இதில் கிடைக்கும் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும், இதன் சுவையும் தான். புரதசத்து, வைட்டமின் எ, பி2, பி5, பாஸ்பரஸ், செலினியம், போலேட் போன்றவை அதிக அளவில் இதில் நிறைந்துள்ளது. அத்துடன் ஒரு பச்சை முட்டையில் 147 mg சொலின் என்கிற முக்கிய சத்தும் உள்ளது.

ஒரே சத்துக்கள் தான்..!

பச்சை முட்டை மற்றும் சமைத்த முட்டை இரண்டிலும் ஒரே அளவிலான சத்துக்கள் தான் உள்ளது. பொதுவாகவே, சமைத்த முட்டையில் பாதிப்பு எதுவும் கிடையாது. ஆனால், இந்த பச்சை முட்டையில் சில முக்கிய அபாயங்கள் உள்ளன. இவை உங்கள் உயிருக்கே உலை வைக்க கூடும்.

தடை செய்து விடும்..!

நீங்கள் பச்சை முட்டையை அப்படியே சாப்பிட்டால் அதில் உள்ள பயோட்டின் (வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ்) உங்களுக்கு கிடைக்காது. ஏனெனில், சமைத்த முட்டையில் இவற்றை நம் உடல் எடுத்து கொள்ளும். ஆனால், பச்சை முட்டையில் உள்ள அவிடின் என்கிற புரதம் பையோட்டினை தடை செய்து விடுமாம்.

கர்ப்பிணிகளுக்கு ஆபத்து..!

பொதுவாகவே கர்ப்பிணிகள் இந்த பச்சை முட்டையை அப்படியே சாப்பிட கூடாது. மீறி சாப்பிட்டால் கருப்பையில் அடிக்கடி வலி ஏற்பட கூடும். இறுதியாக குழந்தை முன்கூட்டியோ, வளர்ச்சி சரியாக இல்லாமலும் பிறக்க கூடும். இதற்கு காரணம் பச்சை முட்டையில் இருக்க கூடிய சால்மோனெல்லா என்கிற பாக்டீரியா தான்.

எதிர்ப்பு சக்தி பிரச்சினைகள்..!

நீங்கள் பச்சை முட்டையை சாப்பிடுவதால் சில பல கோளாறுகள் உங்களுக்கு ஏற்படும். குறிப்பாக உங்களின் எதிர்ப்பு சக்தி மண்டலம் பலவீனம் அடைந்து தொற்றுகளுக்கு வழி வகுக்கும். மேலும், இது குறிப்பாக நீண்ட நாட்களாக நோய்கள் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பை தரும்.

குழந்தைகளும், முதியவர்களும்...

குழந்தைகள் பச்சை முட்டையை சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தி மண்டலம் பாதித்து முதிர்ச்சி தன்மை குறைய கூடும். மேலும், தொற்று நோய்களும் ஏற்படும். வயது முதிர்ந்தவர்கள் இந்த பச்சை முட்டையை சாப்பிட்டால் விஷத்தன்மையாக மாறி விடும். எனவே, இவர்கள் நிச்சயம் பச்சை முட்டையை தவிர்க்க வேண்டும்.

இது தான் காரணம்..!

பச்சை முட்டையில் உள்ள ஆபத்தான நிலைக்கு சால்மோனெல்லா என்கிற பாக்டீரியா தான் காரணம். இவை விலங்குகளின் உடலில் வாழ கூடிய பாக்டீரியா வகையாகும். மனிதர்களின் உடலில் இது இருந்தால் பலவித அபாயங்களை உண்டாக்கும். இதனை சாப்பிடுவதால் நேரடியாக விஷ தன்மையாக மாறிவிட கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உங்களுக்கு எப்படி..?

எய்ட்ஸ், சர்க்கரை நோயாளிகள், புற்றுநோய் கட்டிகள் உள்ளவர்கள் முட்டையை அப்படியே பச்சையாக சாப்பிட கூடாது. மீறி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். சாப்பிட கூடிய உணவே விஷமாக மாற கூடிய தன்மை இந்த பச்சை முட்டையில் உள்ளதாம்.

என்ன செய்யலாம்..?

கடைகளில் சரியாக தட்பவெப்பத்தில் வைத்துள்ள முட்டைகளை மட்டும் வாங்க வேண்டும். மேலும், குளிர் ஊட்டப்பட்ட இடத்தில் வைத்துள்ள முட்டைகளை வாங்குவது சிறந்தது. இதனால் சால்மோனெல்லா பாக்டீரியாவின் வளர்ச்சி தடை செய்யப்படும். இதுவே சாதாரணமான தட்பவெப்பத்தில் வைத்தால் இவற்றின் வளர்ச்சி அதிகரிக்க கூடும்.

முட்டைக்கும் காலாவதியா..?!

நாம் பயன்படுத்த கூடிய ஒவ்வொரு பொருளுக்கும் காலாவதி தேதி இருக்க கூடும். நாம் பெரும்பாலும் காலாவதி தேதிகள் பார்க்காமலே இந்த முட்டைகளை வாங்கி விடுகின்றோம். இது பலவித ஆபத்துகளை நமக்கு ஏற்படுத்துகின்றது. எனவே, முட்டையின் காலாவதி தேதி என்ன என்பதை அறிந்து வாங்குவது சிறந்தது.

No comments:

Post a Comment