Home Ads

Saturday, 11 August 2018

கருணாநிதி சமாதியில் பால் ஊற்றியது ஏன்? சர்ச்சைக்கு பதிலளித்த வைரமுத்துவின் மகன்

கலைஞர் கருணாநிதியை அடக்கம் செய்த மறுநாள் காலையே சென்று பூக்கள் தூவி பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார் வைரமுத்து மற்றும் அவரது மகன்கள்.

இது கருணாநிதி பின்பற்றும் பகுத்தறிவுக்கு எதிரானது என பலரும் கருத்துகளை வெளியிட்டனர்.

இதற்கு பதிலளித்துள்ள மதன் கார்க்கி, மலர்களை தூவி அஞ்சலி செலுத்துவது போன்று பால் தெளித்து வணங்குவதும் மரபு சார்ந்த விடயம்.

“நீத்தார்க்கு பால் வார்த்தல்”ன்னு நம்ம தமிழ் மரபிலேயே இருக்கு, இது தொல்காப்பியத்திலும் உண்டு.

என் தாத்தா இறந்த நேரத்திலும் யாரும் சடங்குகள் செய்யவில்லை, ஆனால் பால் தெளித்தோம்.

இது இந்து முறை சடங்கு கிடையாது, நமது மனதை அமைதிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு மரபு என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment