Home Ads

Sunday, 12 August 2018

கருணாநிதி நடிகருக்கு கொடுத்த அதியுயர் பரிசு! கண்ணீர் சிந்திய கமல்? எழுந்து நின்ற பார்வையாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று வழமை போல நடிகர் கமல் ஆரம்பத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.

இதன்போது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில், பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருணாநிதி கமலை அன்பு தம்பி என்று கூறியுள்ளார்.


இந்த காட்சிகள் திரையில் மீண்டும் காண்பிக்கப்பட்டது. இது நடிகர் கமலுக்கு கிடைத்த வாழ்நாள் பரிசு என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, செம்மொழியான தமிழ் மொழிக்கு அழகு சேர்க்கும் கவி வரிகளை எழுதிய தம்பி கமலின் தமிழ் தொண்டினை மனமாற வாழ்த்துகிறேன் என்றும் இதில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த அற்புதமான தருணத்தை நினைத்து கமல் கண்ணீர் சிந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment