Home Ads

Friday, 10 August 2018

கருணாநிதி இல்லாத இடத்தை அடக்கி ஆளப்போகும் இந்தப் பெண்!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் முத்துவேலர் கருணாநிதி உடல் நலக்குறைவினால் காலமானதாக கடந்த ஏழாம் திகதி காவேரி மருத்துவமனையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கருணாநிதியின் உடல் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவரின் மறைவிற்கு பின்னர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் சர்ச்சைகள் கிளம்ப ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி ஆகியோருக்கிடையிலான மோதலும் ஒன்று.

எனினும் அண்மைய காலங்களாக நடந்து வரும் சில சம்பவங்கள், குறித்த மோதல் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதை தெளிவாக விளக்குகின்றன.

ஏனெனில் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி ஆகியோரின் சகோதரியான செல்வியே இதற்கு காரணமாவார் எனவும் கூறப்படுகிறது.

செல்வி அரசிலில் ஈடுபடும் தனது குடும்பத்தார் மற்றும் குடும்ப விடயங்கள் என அனைத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் வல்லமையுடையவர் என பலரும் குறிப்பிடுகின்றனர்.

அந்த வகையில் இரும்புப் பெண்மணி என தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்திருந்த ஜெயலலித்தாவிற்கு பின் அனைத்தையும் அடக்கி ஆளப்போகும் பெண்ணாக செல்வி இருப்பார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்பதை பலரது கருத்துக்களும் பறைசாற்றுகின்றன.

50 ஆண்டுகள் தி.மு.கவின் தலைவராக இருந்து வந்த கருணாநிதியின் செற்பாடுகள், செல்வி எனும் கதாபாத்திரத்தை மீறி இருந்ததில்லை என்றவாறான கருத்துக்களும் தமிழகத்தில் வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

இதேவேளை கடும் சுகயீனம் காரணமாக உயிரழப்பதற்கு முன் தொடர்ச்சியான கருணாநிதி சிகிச்சைக்கு உட்படுத்திருந்தார்.

இந்த நிலையில் அவரின் உடல் நலத்தில் பின்னடைவு ஏற்பட ஆரம்பித்த போது குடும்ப உறுப்பினர்கள் வைத்தியசாலைக்கு படையெடுக்க ஆரம்பிக்கையில், தனது தாயாரான தயாளு அம்மாளுடன் செல்வி வைத்தியசாலைக்கு சென்றார்.

இந்த சந்தர்ப்பத்தில் செல்விக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருணாநிதி சிகிச்சை பெற்று வந்த காவேரி மருத்துவமனையின் வெளி நோயாளிகள் அனைவரும் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

கருணாநிதி மட்டுமே அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏனைய அறைகள் அனைத்தும் காலியாகவே காணப்பட்டன.

இதன்போது அந்த அறைகளை ஆக்கிரமித்த சில முன்னாள் அமைச்சர்கள் மது அருந்திவிட்டு இருந்த நிலையில் தான் செல்வி கோபம் கொண்டு மு.க.ஸ்டாலினிடம் சண்டையிட்டுள்ளதாக தெரியவருகிறது.

கூட இருக்கும் முன்னாள் அமைச்சர்களையே உன்னால் கட்டுப்படுத்த முடியாதா என ஸ்டாலினிடம் வினவியுள்ளார் அவரின் சகோதரி செல்வி.

இதிலிருந்தே அனைத்து விடயங்களையும் பக்குவமாய் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் செல்வி சகோதரர்களுக்கு பாடத்தையும் புகட்டுவார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அடுத்து, கடந்த ஏழாம் திகதி மாலை கோபாலபுரம் இல்லத்திற்குள் வந்த கருணாநிதியின் மகள் செல்வி அழுது கொண்டே வீட்டிற்குள் நுழைந்த காட்சி அனைவர் மனதையுமே அசைத்தது.

தொடர்ந்து வீட்டினுள் அழுதுகொண்டே இருந்தவர் இரவில் கருணாநிதியின் உடல் வீட்டுக்குள் கொண்டு வரப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் மயக்கமடைந்ததாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த சம்பவங்கள் மூலம் செல்வி தனது தந்தையான கருணாநிதி மீது எந்தளவிற்கு உறுதியான பாசம் வைத்துள்ளார் என்பது புலப்படுகிறது.

எனினும் அவரது உறவினர் வட்டாரங்களில், செல்வி பாசத்தில் எவ்வளவு உறுதியாக உள்ளாரோ அதே போன்று கொஞ்சமேனும் குறையாத உறுதியுடன் சற்றும் சளைப்பில்லாமல் அனைத்து விடயங்களையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயங்களை வைத்து பார்க்கும் போது செல்வி தனது சகோதரர்களை சரியாக வழிநடத்தி அவர்களை அரசியலில் வெகு சிறப்பான இடத்திற்கு கொண்டு வருவார் என்பதும் நிச்சயமே என்பது பலரது கணிப்பாக உள்ளது.

No comments:

Post a Comment