Friday, 10 August 2018

விஸ்வரூபம் - 2 - திரைவிமர்சனம்-அந்த கடலுக்கு அடியில் நடக்கும் சண்டை மட்டும் பாம் செயல் இழப்பு காட்சியும் பெரும் பலம்.


கரு:

சர்வதேச தீவிரவாதிகளின் சதி திட்டத்தில் இருந்து முதல் பகுதியில் அமெரிக்காவை காப்பாற்றிய நாயகர் இதில் நாயகியரின் துணையுடன் லண்டனையும், இந்தியாவையும் காப்பாற்றுவதே கரு.

கதை:

 "விஸ்வரூபம்" முதல் பாதியில் இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து, அந்த தீவிரவாதிகளில் ஒருவராகவே ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில்உண்டு உறங்கி அமெரிக்காவை காப்பாற்றிடும் கமல்., இந்த பகுதி இரண்டில், லண்டன் மாநகரை 1500 டன் ஹிட்லர் காலத்து வெடி பொருட்களில் இருந்து காப்பாற்றுவதோடு, 64 இந்திய நகரங்களை தீவிரவாதிகளின் வெடிகுண்டுகளில் இருந்தும் காப்பாற்றும் "ரா" உளவு அதிகாரியாக அதிரடி செய்திருக்கிறார். அவருக்கு காதலி ஆண்ட்ரியாவும், மனைவி பூஜா குமாரும் தங்கள் உயிரை துச்சமென மதித்து உதவுவதும் அவர்களுடனான ரொமான்ஸும், கமலின் தேசப்பற்றும்தான் விஸ்வரூபம் - 2" படத்தின் கதையும், களமும்.

காட்சிப்படுத்தல்:

"விஸ்வரூபம்" படத்தின் பகுதி இரண்டாக முதல் பகுதியில் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்களோடு இணைந்துகமல்ஹாசன் எழுதி, இயக்கி, நாயகராகநடித்திட., "ஆஸ்கார் பிலிம் பிரைவேட் லிமிடெட்" வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில்., "ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்" வழங்க, "கோல்டன் குளோப் மூவிஸ் "ரிலீஸ் செய்ய வந்திருக்கும் "விஸ்வரூபம் - 2." படத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சிகளை கமல் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் சில இடங்களில் ரசிகனை படுத்தும் விதமாக இருப்பதை கமல் தவிர்த்திருக்கலாம்.

கதாநாயகர்:

கமல், விஸாம் அகமத் கஷ்மீரி எனும் விஸ்வநாதனாக விஸ்வரூபம் ஒன்றின் தொடர்ச்சியாக ,வழக்கம் போல பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அதிலும், கமல்., "இவர், வழிமொழியிரார். அவர்,கழி மொழியரார் ....." எனும் நாரச டயலாக்கில் தொடங்கி., "நீங்க 200 வருஷம் வெள்ளைக்காரன் இந்தியாவை கொள்ளை அடிச்சதை 64 வருஷத்துக்குள்ளஅடிச்சவங்க தானே... நீங்க." எனும் அர்த்தம் பொதிந்த "பன்ச் "பேசும் காட்சி வரை அனைத்திலும் மிரட்டியிருக்கிறார்.

கதாநாயகியர்:

 டாக்டர் நிருபமாவாக வரும் பூஜா குமாரும், அஷ்மிதாவாக கமலின் ஜுனியர் ஆபிஸராக வரும் ஆண்ட்ரியாவும் முதல் பகுதியில் விட்டதை இதில் பிடிக்க முயன்று கமலிடம் நெருக்கமும், கிறக்கமும் காட்டி ரசிகனை ஒரு வழி பண்ணுகின்றனர்.

"நீ ஒட்டு கேட்டியா எட்டிப் பார்த்தாயா..?" என சந்தேகமாக ஆண்ட்ரியாவை கேட்கும் பூஜா குமாரும் சரி ., வில்லனின் ஆளை "பீஸ் பீஸா கழட்டிடுவேன் விஸாம் கொடுத்த ட்ரையினிங் இது... "அடித்து உதைக்கும் ஆண்ட்ரியாவும் சரி போட்டி போட்டு நடித்து படத்திற்கு பலம் கூட்டியிருக்கின்றனர்.

பிற நட்சத்திரங்கள்:

கமலின் சுப்ரீயர் ஆபிஸராக வரும் சேகர் கபூர், தீவிரவாதி ஒமர் உள்ளிட்டவர்களும் ஏனைய இணை , துணை நடிகர்களும் பாத்திரத்திற்கேற்ற பக்கா தேர்வு!

தொழில்நுட்பகலைஞர்கள்:

 படத்தொகுப்பாளரும், அவரதுபடத்தொகுப்பும்கமலுக்கு கைகொடுக்கவில்லை என்றாலும் ., ஒளி ஒலியராகவே கமலுக்கு ஒளிப்பதிவாளர்ஒத்துழைத்திருப்பது படத்திற்கு பெரிய ப்ளஸ்!

ஜிப்ரானின் இசையில்., "சாதி மதம் எனும் வியாதியை போக்கிட "மாயத் திருடன் காம கலைஞன் ... " உள்ளிட்டப் பாடல்களும், பின்னணி இசையும் இப்படத்திற்கு கூடுதல் வலு சேர்த்திருக்கின்றன.

பலம்:

விஸ்வரூபம் - 2 எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் டைட்டிலும் , அந்த கடலுக்கு அடியில் நடக்கும் சண்டை மட்டும் பாம் செயல் இழப்பு காட்சியும் பெரும் பலம்.

பலவீனம்:

"விஸ்வரூபம்" முதல் பகுதிக்கு எடுத்து எடிட்டிங்கில் போன காட்சிகளை சேர்த்து கோர்த்து இன்னும் சில சீன்களை இணைத்து இந்த, இரண்டாம் பகுதியை படைத்திருப்பது போன்று விஸ்வரூபம் - 2 காட்சிக்கு காட்சி தெரிவது சற்றே பலவீனம்.

இயக்கம்:

கமலின் எழுத்து, இயக்த்தில், "எதிரியை நேருக்கு நேர் பார்த்துட்டே சாகணும்" "சாதகமா நடக்குமான்னு எனக்கு சந்தேகமா இருக்கு" "பொம்பளை மாதிரி பேசாத பொம்பளைக் கூட அதிகமா பேசாத" உள்ளிட்ட வசனங்களில் பளிச் பளிச் எனத் தெரியும் கமல் ஹாசன், திரைக்கதை, இயக்கத்தில் சில பல இடங்களில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக செய்ய முயற்சித்து, ரசிகனின் பொறுமையை சோதித்திருப்பதை மட்டும் தவிர்த்திருக்கலாம்.

மற்றபடி., "கடவுள், கண்டிப்பா உன்னை தண்டிப் பார். உன் கடவுளைத் தவிர வேற இல்லைன்னு நம்பறவன் தானே நீ அப்ப அவரே தண்டிப்பார்" எனும் போது கமல் என்டரி கொடுத்து வில்லனின் ஆட்களை புரட்டி எடுக்கும் இடங்களில் தன் கடவுள் மறுப்பு கொள்கையை காண்பிக்க முயன்ற அளவிற்கு கமல் கதை, திரைக்கதையில் கவனம் செலுத்தாததும்., "இங்க தீவிரவாதின்னு யாருமேஇல்ல "தீவிரவாதத்திற்கு நியாயம் சேர்க்க முயல்வதும், ஈஸ்வர் ஐயர் பாத்திரத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை தொடர்ச்சியாக நோகடிக்க முயன்றிருப்பதும்தேவைதானா?- இயக்குனர் கமல் இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.

பைனல்" பன்ச் " :கமலின் "விஸ்வரூபம் - 2', 'விஸ்வரூபம் ' ஒன்றின் 'மிச்ச சொச்சம்! "

No comments:

Post a Comment