Home Ads

Wednesday 2 January 2019

கண்டுபிடிக்கக்கூடாத விசித்திர கிரகத்தை கண்டறிந்த வானியலாளர்கள்

நமது பிரபஞ்சம் எண்ணற்ற மர்மங்களை கொண்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பல்வேறு விடைகளுக்காக பிரபஞ்சத்தை அதிகமாக தேடும்போதும், அதிகமாக அதை புரிந்துகொள்ள முயற்சிக்கும் போதும் தான் நமக்கு உண்மையில் எவ்வளவு குறைவாக தெரிந்துள்ளது என்பதை அறிந்துகொள்வோம்.

ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நம்மை ஆச்சர்யப்படுத்திக்கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சம், இந்த பரந்த விண்வெளியில் நாம் எவ்வளவு அற்பமானவர்கள் என்பதை காண்பிக்கிறது.விண்வெளியில் உள்ளவை நம் புரிதலை முழுவதுமாக மாற்றக்கூட வாய்ப்புகள் உள்ளன. முன்பு சாத்தியமில்லை என நினைத்த விசயங்கள் தற்போது அதன் உண்மையான விளக்கத்தை வழங்கி சாத்தியமே என காண்பித்துள்ளது. (IMPOSSIBLE : I'm possible).

சுமார் 12 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது

தற்போது வானியலாளர்கள், நம்மால் இதுவரை இருக்கும் என நினைத்துக்கூட பார்த்திராத தூரத்து ஏலியன் உலகை, அதுவும் பலூன் வடிவ கிரகத்தை கண்டறிந்துள்ளனர். நெப்டியூன் அளவிற்கு உள்ள இந்த கிரகம் சுமார் பூமியிலிருந்து சுமார் 12 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.ஜெனிவா பல்கலைகழகத்தின் அறிவியலாளர்கள் தலைமையிலான சர்வதேச ஆய்வுக்குழு இந்த கிரகத்தை கண்டறிந்துள்ளது. இந்த கிரகத்தின் வளிமண்டலம் முழுவதும் ஹீலியம் வாயுவால் நிரப்பப்பட்டுள்ளதால், இந்த தொலைதூர கிரகமானது பலூன் வடிவத்தில் உள்ளதாக வானியலாளர்கள் கூறுகின்றனர்.

ஜெஸிகா ஸ்பேக்

எக்ஸ்டர்'ஸ் இயற்பியல் மற்றும் வானியல் துறை பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர். ஜெஸிகா ஸ்பேக் இந்த விசித்திர கிரகத்தை பற்றி கூறும் போது, " இது உண்மையிலேயே ஆச்சர்யமளிக்கும் கண்டுபிடிப்பு. அதிலும் குறிப்பாக வெளிக்கோள்களின் வளிமண்டத்தில் ஹீலியம் கண்டறியப்படுவது இது தான் முதல்முறை" என தெரிவித்தார்.

ஸ்பெக்ட்ரோகிராப்

அந்த கிரகத்தின் புரவல நட்சத்திரத்தில் இருந்து வெளியான கதிர்வீச்சின் காரணமாக ஹீலியம் வாயு அங்கு வெடித்து வருவதாகவும் தெரிகிறது. இந்த புதிய ஆய்வு முடிவுகளை பயன்படுத்தி, எந்த வகையான கிரகங்களில் அதிகளவிலான ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் உள்ளன, எவ்வளவு காலத்திற்கு அவை வளிமண்டலத்தில் இருக்கும் என்பதை கண்டறியமுடியும் என நம்புவதாக அவர் தெரிவித்தார். சிக்னஸ் தொகுதி மண்டலத்தில் இருக்கும் இந்த விசித்திர கிரகமானது HAT-P-11b என பெயரிடப்பட்டுள்ளது.


ஸ்பெயனில் உள்ள ஸ்பெக்ட்ரோகிராப் -ஐ பயன்படுத்தி, இந்த கிரகம் அதன் புரவல நட்சத்திரத்தை கடந்து செல்லும் போது எவ்வளவு ஒளியை தடுக்கிறது என்பதை வானியலாளார்கள் கணக்கிட்டுள்ளனர். பின்னர் இந்த கருவியை பயன்படுத்தி,நட்சத்திரத்தின் ஒளியை வானவில் போன்ற நிறத்தொகுதிகளாக பிரித்தனர்.

ஹீலியம் அணுக்கள்

ஹீலியம் குறிப்பிட்ட அலைநீளம் கொண்ட ஒளியை ஈர்க்கும் என்பதால், அந்த ஏலியன் உலகை சுற்றியுள்ள பெரிய அளவிலான வாயுவை கண்டறிந்தனர். மேலும் இந்த வாயு தான் அதிக அளவிலான வாயுவை தடுப்பதாகவும் கூறியுள்ளனர்.

கணிணியை பயன்படுத்தி எப்படி ஹீலியம் அணுக்கள் பயணிக்கின்றன என்பதையும் துல்லியமாக கண்டறிந்தனர்.

ஹீலியம் வாயு

இந்த கிரகத்தின் பகலாக இருக்கும் பகுதியில் இருந்து இரவாக இருக்கும் பகுதிக்கு ஹீலியம் வாயு 10,000kph என்ற வேகத்தில் வீசிகிறது. மிகவும் மெலிதான வாயு என்பதால், கிரகத்தின் ஈர்ப்பில் இருந்து எளிதில் தப்பி, அதனைச்சுற்றி மேகமாக உருவாகிறது என்கிறார் கம்ப்யூட்டர் சிமுலேசன் செய்ய விஞ்ஞானி வின்சென்ட்.

20 மடங்கு அருகில் உள்ளது

இதன் காரணமாகவே இந்த கிரகம் விசித்திரமான வடிவத்தை வழங்குகிறது. சூரியனில் இருந்து பூமி இருக்கும் தொலைவை விட, HAT-P-11b யின் வளிமண்டலம் அதன் மைய நட்சத்திரத்தில் இருந்து 20 மடங்கு அருகில் உள்ளது. இதன் காரணமாக வளிமண்டலம் நட்சத்திரம் தாக்கத்தை ஏற்படுத்தி, கதிர்வீச்சின் காரணமாக ஹீலியன் வாயு அங்கிருந்து தப்பிப்பதாக கூறுகிறார் இந்த முதல்கட்ட ஆய்வை முடித்தவரும், ஜெனிவா பல்கலைகழகத்தை சேர்ந்தவருமான ரோமைன் அலாட்.

No comments:

Post a Comment