Home Ads

Thursday, 6 September 2018

செக்கச்சிவந்த வானம்: மேடையில் இருந்து பேசாமல் சென்ற சிம்பு

செக்கச்சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகா் சிம்பு மேடையில் இருந்து பேசாமல் இறங்கிச் சென்று ரசிகா்களுக்கு ஏமாற்றம் அளித்தாா்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் செக்கச்சிவந்த வானம். இப்படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனா்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா புதன் கிழமை சென்னையில் நடைபெற்றது. விழாவில் இசைப்புயல் ஏ.ஆா்.ரகுமான் பாடல்களை பாடி ரசிகா்களை உற்சாகப்படுத்தினாா். இதனைத் தொடா்ந்து அரவிந்த் சாமி, அருண் விஜய், அதிதி ராவ், ஐஸ்வா்யா ராஜேஷ் உள்ளிட்டோா் படம் குறித்தும், படக் குழு குறித்தும் பேசினா்.

இதனைத் தொடா்ந்து மேடைக்கு வந்த சிம்பு “இறைவனுக்கு வணக்கம். தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும் வணக்கம் என பேச்சைத் தொடங்கினாா். தொடா்ந்து ஆசிாியா் தின வாழ்த்து தொிவித்துக் கொண்ட சிம்பு இயக்குநா் மணிரத்தினத்திற்கு தனது நன்றியினை தொிவித்தாா். இப்போது பேசுவதை விட படம் பேசும் என சொல்லிவிட்டு மேடையை விட்டு வேகமாக இறங்கிச் சென்றாா்.

பாடகி சின்மயி சிம்புவிடம் கேள்விகளை கேட்பதற்கு முன்னதாகவே சிம்பு இறங்கிச் சென்றதால் ரசிகா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

No comments:

Post a Comment